நீண்ட கால மூலதன ஆதாய வரி… – யூலிப் Vs ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் எது பெஸ்ட்?

0
236
Want create site? Find Free WordPress Themes and plugins.

helpful siteமீபத்தில் வெளியான மத்திய பட்ஜெட்டுக்குப்பிறகு பலரது கவனம் மீண்டும் யூலிப் (ULIP) பாலிசிகள் மீது திரும்பியிருக்கிறது. இந்த கவனத்துக்குக் காரணம், ‘‘பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மீதான நீண்ட கால ஆதாயத்தில் ரூ.1 லட்சத்துக்கு மேலே சென்றால் 10% வரி கட்ட வேண்டும்” என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்ததே.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து,  ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானத்தைவிட யூலிப் பாலிசிகள்மூலம் கிடைக்கும் வருமானம் அதிகமாக இருக்கும் என்று விளம்பரப்படுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக முதலீட்டாளர்கள் சீண்டாமல் இருந்த யூலிப் பாலிசிகள்மீது மீண்டும் கவனம் திரும்பியிருக்கிறது.

இது உண்மையா என்பதைப் பார்க்கும்முன், யூலிப், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் சாதக, பாதகங்களை முதலில் பட்டியலிடுவோம்.

buy generic modafinil online uk யூலிப் பாலிசிகள் – பாதகங்கள் 

1. யூலிப் பாலிசிகளில் ஒதுக்கீட்டுக் கட்டணங்கள் ஆண்டுக்கு 2 – 5% வரை உண்டு. 

2. பாலிசி நிர்வாகக் கட்டணமாக ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.700 முதல் அதிகபட்சமாக ரூ.1,000 பிடிக்கப்படுகிறது.

3. காப்பீட்டுக் கட்டணமாக ஒவ்வொரு ஆயிரம் ரூபாய் காப்பீட்டிற்கும் குறைந்தபட்சம் ரூ.1, அதிகபட்சமாக ரூ.12 என பிரீமியத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. மேலும், இது பாலிசிதாரரின் வயதிற்கேற்ப அதிகமாகும்.

4. பாலிசி எடுத்து, ஐந்து வருடங்களுக்கு முன்னர் சரண்டர் செய்ய இயலாது.

5. ஐந்து ஆண்டுகளுக்குமுன்னரே பாலிசியை சரண்டர் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், 2 – 6% வரை அபராதம் விதிக்கப்படும்.

6.  நீண்ட கால முதலீடாக அதாவது, குறைந்த பட்சம் 10 ஆண்டுகளுக்கு பாலிசியின் பிரீமியம் கட்டினால் மட்டுமே இது லாபகரமாக இருக்கும்.தவிர, பங்குச் சந்தை மிகச் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இது லாபகரமாக இருக்கும்.

7. நீங்கள் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் செயல்திறன் சரியில்லாதபோது, ஒரு இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்திலிருந்து மற்றொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றம் செய்ய இயலாது.

a fantastic read   யூலிப் – சாதகங்கள்

1. வருமான வரிப் பிரிவு 10(10)d-ன்கீழ், இழப்பீடு/ முதிர்வுத் தொகைக்கு வருமான வரி கிடையாது.

2. குறுகிய கால ஆதாய  மற்றும் நீண்ட கால ஆதாய வரி ஏதுமின்றி, ஒரு ஃபண்டிலிருந்து மற்றொரு ஃபண்டிற்கு இலவசமாக மாறும் வசதி உள்ளது.

இனி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் உள்ள சாதக, பாதகங்களைப் பார்ப்போம்.

  ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் – சாதகங்கள்

1. ஒதுக்கீட்டுக் கட்டணங்கள் என எதுவுமில்லை. முதலீட்டுத் தொகை 100% எந்தச் சேதாரமும் இல்லாமல் முதலீடு செய்யப்படும்.

2. நிர்வாகக் கட்டணங்கள் இல்லை. அதிகபட்ச செலவு விகிதம் 2.5 சதவிகிதமாக இருக்கும்.

3. காப்பீட்டு ஒதுக்கீட்டுக் கட்டணங்கள் இல்லை.

4. உங்கள் முதலீட்டை தேவைக் கேற்ப (மூலதன ஆதாய வரிக்கு (10%, 15%) உட்பட்டு), எப்போது வேண்டு மானாலும் திரும்பப்  முடியும்.

5. வருமான வரிச் சலுகை வேண்டும் என்கிறபோது, பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளலாம்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்  – பாதகங்கள்

1. யூனிட்டுகளை ஓராண்டுக்குள் விற்றால், லாபத்துக்கான குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% கட்ட வேண்டும்.

2. யூனிட்டுகளை ஓராண்டுக்குப்பின்னர் விற்றால் வரும் லாபம் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்டதாக இருந்தால், அந்த லாபத்துக்கு 10% நீண்ட கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.

  எது பெஸ்ட்?

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி 10%  கட்டினாலும், அது ஒரு சிறந்த முதலீடாக இருக்கும். இதை ஓர் உதாரணத்துடன் பார்ப்போம்.

40 வயது கொண்ட ஒருவர், வருடத்திற்கு 60,000 ரூபாயை ஒரு சிறந்த யூலிப் பிளானிலும், அதே வயதுடைய மற்றொருவர்  60,000 ரூபாயில் ரூ.7 லட்சத்திற்கு ஒரு டேர்ம் பிளான் எடுத்துக் கொண்டு மீதமுள்ள தொகையை பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்கிறார். (பார்க்க அட்டவணை 1 மற்றும் 3)

  யூலிப் மூலமான வருமானம்

யூலிப் பாலிசியில் ரூ.60,000 பிரீமியம் செலுத்தும்போது, பிரீமியம் ஒதுக்கீட்டுக் கட்டணமாக ரூ.3,600, காப்பீட்டுக் கட்டணமாக ரூ.1,266, சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி) வரியாக ரூ.1,144 பிடித்ததுபோக மீதமுள்ள தொகையை முதலீடு செய்யப்படும். இதன்மூலம் 12% வருமானம் வரும்பட்சத்தில், பாலிசி நிதி மேலாண்மைக் கட்டணமாக 1.35% பிடித்தம் போக வருடக் கடைசியில் பாலிசியில் ரூ.58,857 மட்டுமே இருக்கும். மேலும், ஒவ்வோர் ஆண்டும், மேலே குறிப்பிட்டுள்ள  கட்டணங்களைக் கழித்தபிறகே முதலீடு செய்யப்படும்.

பத்து வருடங்கள் கழித்து பாலிசி முதிர்வடையும்போது ரூ.9,97,668 கிடைக்கும். மேலும், பாலிசிதாரர் எந்த வருடத்தில் இறந்தாலும், அவரின் குடும்பத்திற்கு, ஃபண்டில் உள்ள அந்த வருட மதிப்பு, காப்பீட்டுத் தொகை, இதில் எது அதிகமோ அது கிடைக்கும்.

மேலும், இந்த முதலீடு பங்குச் சந்தை சார்ந்த முதலீடாக இருந்தால், நீண்ட காலத்தில் 12% வருமானம் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. (பங்குச் சந்தை சார்ந்த யூலிப் பிளான்களின் கடந்த கால வருமான விகிதங்கள் அட்டவணை 2-ல் தரப்பட்டுள்ளது. இந்த பிளான்களின் வருமானத்தை ஆராய்ந்தால், கடந்த 10 ஆண்டு காலத்தில் எந்தவொரு யூலிப் பாலிசியிலும் 12% வருமானம் கிடைக்கவில்லை.)

  ஃபண்ட் மூலமான வருமானம்

இப்போது, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் முதலீட்டில் வரும் ஆதாயத்தைப் பார்ப்போம்.வருட முதலீடாக ரூ.60,000 எடுத்துக்கொண்டு, அதில் டேர்ம் இன்ஷூரன்ஸ் ரூ.2,611 பிரீமியமாகக் கட்டிவிட்டு, மீதமுள்ள தொகையை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம் (பார்க்க அட்டவணை 3).

இதன் மூலம் அதிக லாபம் கிடைப்பதுடன்,  முதலீட்டாளர் ஒருவர்  முதலீட்டைத் தொடங்கி நான்கு அல்லது ஐந்து வருடங்களில் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், அவரின் குடும்பத்துக்கு யூலிப் அளிக்கும் தொகையைவிட மிக அதிகமாகவே கிடைக்கும்.

(அட்டவணை 4-ல் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், மேலும், லார்ஜ் மற்றும் மல்டிகேப் ஃபண்டின் 1, 3, 5 மற்றும் 10 வருடங்களின் வருமான விகிதங்கள் தரப்பட்டுள் ளன.) கடந்த கால வரு மான விகிதத்தைப் பார்க்கும் போது, நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் 12% வருமானம்  கிடைப்பது சாத்தியமே.

எனவே, இந்த பட்ஜெட்டில் அறிவித்த வரி, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும்  மொத்த லாபத்தில் சிறிது இழப்பை ஏற்படுத்துமே தவிர, யூலிப் பாலிசியினால் முதலீட்டாளர்களுக்கு  பெரிய லாபம் இல்லை.

ஆகவே, யூலிப்பைவிட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்  முதலீடு மற்றும் டேர்ம் பிளான் எடுப்பதே சரியானது என்பதில் சந்தேகமில்லை.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here