Posted Date : 06:00 (10/02/2018) ‘ஜாக்பாட்’ அடிக்கும் மிளகாய்! – கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள்!

0
68
Want create site? Find Free WordPress Themes and plugins.

buy modafinil from usa காய்கறிச் சாகுபடி விவசாயிகளுக்கு ‘ஜாக்பாட்’ கொடுக்கும் பயிர்களில் மிளகாயும் ஒன்று. ஆனால், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களுக்கு மிளகாயும் விதிவிலக்கல்ல. முறையாகப் பராமரிக்காவிட்டால், நோய்த்தாக்குதல்களுக்கு உள்ளாகி மகசூல் பாதிக்க வாய்ப்புண்டு. ஒவ்வொரு பயிருக்குமான தனித்தன்மைகளையும், பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதற்கான காரணங்களையும் அறிவியல் ரீதியாகத் தெரிந்துகொண்டு… தேவையான சத்துகளை இயற்கை இடுபொருள்கள் மூலமாகக் கொடுத்து வந்தால், பங்கமில்லாமல் மகசூலை எடுத்துவிட முடியும்.

மிளகாய்ச் சாகுபடியில் பருவத்துக்கேற்ப கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்துக் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் சொன்ன விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

“மிளகாயில் சம்பா, குண்டு என இரண்டு ரகங்கள் உள்ளன. மானாவாரியாகச் சாகுபடி செய்யப்படும் குண்டு மிளகாயில்… பரமக்குடி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட பி.எம்.கே-1 என்ற ரகம்தான் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், அந்தந்தப் பகுதிகளில் சில ரகங்களைச் சாகுபடிசெய்து வருகிறார்கள் விவசாயிகள். சிவகங்கை குண்டு, ராமநாதபுரம் குண்டு, சாலைகிராமம் குண்டு, இளையான்குடி குண்டு, தூத்துக்குடி குண்டு என்ற பெயரில் உள்ளூர் ரகங்களும் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் உருவத்தில் சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன.

கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட கே-1, கே-2 ஆகிய சம்பா மிளகாய் ரகங்கள் வற்றல் பயன்பாட்டுக்கானவை. கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட கோ-1, கோ-2, கோ-4 ஆகிய ரகங்கள் பச்சைமிளகாயாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றவை. மேலும், பச்சைமிளகாய் மற்றும் வற்றல் ஆகிய இரண்டு பயன்பாடுகளுக்கும் ஏற்ற கலப்பின ரகம் ஒன்றையும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பெரியகுளம் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட பி.கே.எம்-1 என்ற ரகம் உள் மாவட்டங்களுக்கும், பாலூர் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட பாலூர்-1 என்ற ரகம் கடலோரப்பகுதிகளுக்கும் ஏற்றவையாக இருக்கின்றன. மேற்கண்ட ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து வெளியிடப்பட்ட ரகங்களில் கலப்பின ரகத்தைத் தவிர மீதி அனைத்துமே நாட்டு ரகங்கள்தான். தனியார் விதை நிறுவனங்கள்தான் வீரிய ரக விதைகளைச் சந்தையில் விற்பனை செய்கின்றன” என்ற செந்தூர்குமரன் சாகுபடி முறைகளைச் சொன்னார்.

ஆர்.குமரேசன்
accutane for cheap
தண்ணீர் தேங்கக் கூடாது 

“ஒரு ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்ய நாட்டு மிளகாய் ரகங்களாக இருந்தால், ஒரு கிலோ (ஏக்கருக்கு 400 கிராம்) விதை  தேவை. கலப்பின ரகங்களாக இருந்தால் 250 கிராம் (ஏக்கருக்கு 100 கிராம்) விதை போதுமானது. மிளகாயை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம் என்றாலும்… ஜனவரி-பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர்-அக்டோபர் ஆகிய பருவங்கள் சிறப்பானவை. வறட்சியைத் தாங்கி வளரும் பயிர் மிளகாய். இதைச் சாகுபடிசெய்யும் நிலத்தில் வடிகால் வசதி இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கினால் வேரழுகல் நோய் தாக்கிவிடும்.
buy online Seroquel
நாற்றாக நடவு 

மூன்று அடி அகலம், அரையடி உயரம் இருக்குமாறு படுக்கை அமைக்க வேண்டும். நீளத்தைத் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். நாற்றங்காலில் மண் ‘பொலபொல’பாக இருக்குமாறு நன்கு கொத்தி… கல் போன்ற பொருள்களை நீக்கிச் சமப்படுத்த வேண்டும். பிறகு படுக்கையில் பத்து சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு வரிசையாக விரலால் கோடு இழுத்து… அந்தக் கோட்டில் விதைகளைத் தூவி மண்ணைப் பரப்பிவிட வேண்டும். பிறகு, நாற்றங்கால் படுக்கைகளை வைக்கோலால் மூடி, பூவாளி மூலமாகத் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த ஏழு நாள்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும். பிறகு வைக்கோலை எடுத்துவிட வேண்டும். 25 நாள்கள் வரை நாற்றங்காலில் தண்ணீர் தெளித்துப் பராமரித்துப் பிறகு வயலில் நடவுசெய்யலாம்.

நவீன முறையில்…. குழித்தட்டிலும் நாற்றுகளை உற்பத்திசெய்யலாம். 300 கிலோ தென்னைநார்க் கழிவுடன் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் ஒன்றரை கிலோ அளவு எடுத்து, குழித்தட்டில் உள்ள குழிகளில் நிரப்ப வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு ஒரு விதை என விதைக்க வேண்டும். விதையிடப்பட்ட குழித்தட்டுகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி, மேலே உள்ள தட்டைக் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். மேலே உள்ள தட்டுமீது, பூவாளி மூலமாகத் தொடர்ந்து தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஏழு நாள்களில் விதைகள் முளைவிடும். பிறகு தட்டுகளை எடுத்து, 50 சதவிகித நிழல்வலைக் குடிலில் வைத்து, இருபது நாள்கள் தண்ணீர் தெளித்து வர வேண்டும். பிறகு எடுத்து நடவு செய்யலாம்.

நாற்றுகள் வளரும் பருவத்தில் விதைத்த 15-ம் நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் நாற்றுகள் நன்கு வளர்ந்து வரும்.

கடைசி உழவுக்குமுன் பிண்ணாக்கு

மிளகாய்ச் சாகுபடி நிலத்தைத் தயாரிப்பதில் அதிகக் கவனம் தேவை. இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை, ‘வருமுன் காப்போம் முறை’தான் சிறந்த பலனைத்தரும். இயற்கை விவசாயத்துக்குத் தொழுவுரம் அவசியம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 10 டன் தொழுவுரம் இட்டுப் பரப்பி, உழவு செய்ய வேண்டும். நிலத்தை நன்கு உழுதுவிட்டு… ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு என்ற கணக்கில் தூவிவிட்டு, ஓர் உழவு செய்து பிறகுதான் பார் அமைக்க வேண்டும். இதனால், வேரழுகல் நோயைத் தடுத்துவிடலாம். பார் அமைத்து வரிசைக்கு வரிசை இரண்டரை அடி, செடிக்குச் செடி இரண்டு அடி என்ற இடைவெளியில் நாற்றுகளை நடவுசெய்ய வேண்டும்” என்ற செந்தூர்குமரன் உர மேலாண்மை குறித்துச் சொன்னார்.

அதிகச் சத்துகள்கொண்ட பசுந்தாள் உரங்கள் 

“நடவுசெய்த 20, 40, 60, 80-ம் நாள்களில் இடுபொருள்கள் இட வேண்டும். இப்படித் தொடர்ச்சியாக உரம் இட்டால்தான் நல்ல மகசூல் எடுக்க முடியும். மண்புழு உரம், தென்னைநார்க் கழிவு உரம், சர்க்கரை ஆலைக்கழிவு உரம் ஆகிய இயற்கை இடுபொருள்கள் சிறந்தவை. மண்புழு உரமாக இருந்தால், ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒவ்வொரு முறையும் 500 கிலோ அளவு இட வேண்டும். தென்னைநார்க் கழிவு உரமாக இருந்தால் ஒவ்வொரு முறையும் ஒரு டன் அளவு இட வேண்டும். ஆலைக்கழிவு உரமாக இருந்தால், ஒவ்வொரு முறையும் 1,200 கிலோ அளவு இட வேண்டும்.

கோழி எருவைப் பயன்படுத்துவதாக இருந்தால்… ஓர் ஆண்டுவரை ஆற வைத்துத்தான் பயன்படுத்த வேண்டும். இல்லாவிடில் செடிகள் கருகிவிடும். கோழி எருவை ஓர் இடத்தில் 1 அடி உயரத்துக்குக் கொட்டி மாதம் ஒருமுறை தண்ணீர் தெளித்து வர வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் ‘அமோனியா’வின் அளவு குறையும். பிறகு நன்றாகக் காய வைத்துப் பயன்படுத்தலாம். கோழி எருவாக இருந்தால், ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒவ்வொரு முறையும் 300 கிலோ அளவு போதுமானது. இவையில்லாமல், சணப்பு, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை மட்க வைத்தும் பயன்படுத்தலாம். மட்கிய பசுந்தாள் உரங்களை ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ என்ற அளவில் ஒவ்வொரு முறையும் இடவேண்டும். பசுந்தாள் உரங்களில் மண்புழு உரத்தைவிட ஒரு மடங்கு அதிகமாகத் தழை, மணி, சாம்பல் சத்துகள் இருக்கின்றன.

15-ம் நாள் கவனம் 

நாற்று நடவு செய்த 15-ம் நாள் மிளகாய்ச் சாகுபடியில் மிக முக்கியமான நாள். அப்போது ஒவ்வொரு செடியிலும் பத்து இலைகள் அளவுக்கு முளைத்திருக்கும். அந்த நேரத்தில், இலைகளில் ‘குளோரஃபில்’ என்கிற பச்சையம் அதிகம் இருக்காது என்பதால், பூச்சிகள் வருவதில்லை. அந்த நேரத்தில் அதாவது நாற்று நடவு செய்த 15-ம் நாள்… ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதி சோப் என்று கலந்து செடிகள்மீது தெளித்துவிட வேண்டும். இது மிக மிக முக்கியமான விஷயம். இதன் வாசனை அடுத்த பதினைந்து நாள்கள் வரை செடிகளில் இருக்கும். இதனால், சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், அசுவினி ஆகியவை பயிரை அண்டாது. 15 அல்லது 20 நாள்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை வேப்பெண்ணெய் கரைசலைத் தெளிக்கலாம். இதைத் தெளித்தால் பூச்சிகள் வருவதில்லை என்று அதிகமாகவும் தெளிக்கக் கூடாது. அதிகமாகத் தெளித்தால், வேப்பெண்ணெயில் உள்ள ‘அசாடிராடின்’ (Azadirachtin) என்ற வேதிப்பொருள், செடிகளை மலடாக்கிவிடும். அதனால், பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே தெளிக்க வேண்டும். பூ எடுத்த பிறகு, மாதம் ஒருமுறை வேப்பெண்ணெயைத் தெளிக்கலாம்.

நடவு செய்த 35-ம் நாள் முதல் பூக்கள் பூக்கும். 55-ம் நாளுக்குள் முழுமையாகப் பூக்கள் வந்துவிடும். ரசாயன விவசாயத்தைவிட, இயற்கை விவசாயத்தில் அதிகளவு பூக்கள் இருக்கும். ஆனால், முறையாகப் பராமரிக்காவிட்டால் உதிர்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆக்சின் (Auxion) என்ற ஹார்மோன் செடியில் இயற்கையாகவே உற்பத்தியானால் மட்டுமே, அந்தச் செடியால் ஆரோக்கியமான இலைகளை உருவாக்க முடியும். ஆக்சின் உற்பத்தியாகும் அளவு குறைந்து, ‘சைட்டோகைனின்’ மற்றும் ‘ஜிம்ப்ரலின்’ (Gimbbrallin) ஆகிய ஹார்மோன்கள் உருவாகும்போதுதான் செடிகளில் பூக்கள் பூக்கும். இதுதான் செடிகள் வயதுக்கு வரும் நிகழ்வு. வயதுக்கு வந்த செடியால் மட்டுமே மகசூல் கொடுக்க முடியும். ஆக, நடவுசெய்த 35 முதல் 55 நாள்களில் செடிகளில் சைட்டோகைனின் மற்றும் ஜிப்ரலின் ஆகிய ஹார்மோன்கள் அதிகளவு உற்பத்தியாக வேண்டும்.  ஒருவேளை, இந்த ஹார்மோன்களுக்குப் பதிலாக, ஆக்சின் ஹார்மோன் மட்டுமே உற்பத்தியாகிக் கொண்டிருந்தால் பூவெடுக்கும் காலம் தள்ளிப்போகும். இதனால், மகசூல் இழப்பு ஏற்படும்.

எனவே, சைட்டோகைனின் மற்றும் ஜிம்ப்ரலின் ஹார்மோன்களின் அளவை அதிகப்படுத்த வளர்ச்சி ஊக்கிகள் அவசியம். இன்டோல் பியூட்ரிக் அமிலம் (Indole Butric Acid) மற்றும் நாப்தலின் அசிட்டிக் அமிலம் (Naphthalene Acetic Acid) ஆகியவை இவற்றின் வளர்ச்சியைத் தூண்டிவிடக் கூடியவை. இவை இரண்டும் பஞ்சகவ்யாவில் இருக்கின்றன என்பதை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, 35 நாள்களுக்கும்மேல் செடிகள் பூக்கவில்லை என்றால், பஞ்சகவ்யாவைத் தெளிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இந்த அளவுக்கு அதிகமாகச் சேர்க்கக் கூடாது. அதேபோல, பஞ்சகவ்யாவுடன் வேப்பெண்ணெய் மருந்து உள்பட எந்தப் பூச்சிவிரட்டிகளையும் கலந்து தெளிக்கக் கூடாது. இதனால், எதிர்வினைகள் ஏற்பட்டு நாம் தெளிக்கும் நோக்கம் வெற்றிபெறாமல் போகும். பூக்கள் உதிராமல் இருக்கவும் பஞ்சகவ்யாவைத் தெளிக்கலாம். பூக்கள் தோன்றியதில் இருந்து சரியாக 40-ம் நாள் காய்கள் அறுவடைக்கு வந்துவிடும்” என்றார் செந்தூர்குமரன்.

தொடர்புக்கு,
பேராசிரியர் செந்தூர்குமரன்,
தொலைபேசி: 04577 264288
செல்போன்: 94438 69408


ஏற்றுமதியாகும் சம்பா!

சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் மானாவாரியில் குண்டு மிளகாய்ச் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா மிளகாய் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. மிளகாயில் கேப்சின் ஒலியோரெசின் (Capsaicin Oleoresin) என்ற இரண்டாம்நிலை வேதிப்பொருள் இருக்கிறது. இதுதான் காரத்தன்மைக்குக் காரணமானது. இது மிளகாயின் தோல், நடு அச்சில் இருக்கும். சம்பா மிளகாய் நீளமாக இருப்பதால், அதில் இந்த வேதிப்பொருள் அதிகமாக இருக்கும். குண்டு மிளகாயில் நடு அச்சின் நீளம் குறைவாக இருப்பதால், இந்த வேதிப்பொருள் குறைவாக இருக்கும். குண்டு மிளகாய் பெரும்பாலும் மசாலா தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாகப் பயன்படுகிறது. பெரும்பாலும் ஏற்றுமதியாவதில்லை. காரம் அதிகமாக இருக்கும் சம்பா மிளகாய்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மிளகாய் ஒரு வெப்பமண்டலப் பயிர் என்பதால், இந்தியா போன்ற நாடுகளில்தான் இதைச் சாகுபடி செய்ய முடியும். ஆனால், உலகம் முழுவதும் உணவில் காரம் சேர்க்கப்படுவதால், இதன் தேவை அதிகமாக இருக்கிறது. மிளகாய் விளையாத குளிர்நாடுகளில், மிளகாயை இறக்குமதி செய்து, அதிலிருந்து ஒலியோரெசினைப் பிரித்து எண்ணெய் எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அந்த எண்ணெயைக் காரத்துக்காகச் சமையலில் சேர்த்துக்கொள்கிறார்கள்.


மிளகாய்க்கும் வெங்காயத்துக்கும் ஆகாது!

சோளம் சாகுபடி செய்த வயலில் அடுத்த பயிராக மிளகாயைச் சாகுபடி செய்யக்கூடாது. இதனால் வேரழுகல் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புண்டு. மிளகாய் பயிரிடும் வயலில் 15 வரிசைக்கு ஒரு வரிசை என அகத்தியை நடவு செய்தால், செடிகள் வெயிலிலிருந்து பாதுகாக்கப்படும். அதேபோல மிளகாய்க்கு ஊடுபயிராக வெங்காயத்தைச் சாகுபடி செய்யக்கூடாது.


குருவிக்கண் நோய் 

மிளகாய்ச் செடிகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது வேரழுகல் நோய். வயலில் பிண்ணாக்கு இடுதல், தண்ணீரைத் தேங்கவிடாமல் தடுத்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்தால் வேரழுகல் நோய் வராது. அடுத்து குருவிக்கண் நோய் (பழ அழுகல் நோய்). இதற்குத் தசகவ்யா நல்ல மருந்து. ஆடு தீண்டாபாளை, புங்கன், ஆடாதொடை, நொச்சி, எருக்கன், கொளுஞ்சி போன்ற தாவரங்களின் இலைகளில், மொத்தமாக ஒரு கிலோ எடுத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு அவை மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரை ஊற்றி, 10 நாள்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு இந்தக் கரைசலிலிருந்து ஒரு லிட்டர் எடுத்து ஐந்து லிட்டர் பஞ்சகவ்யாவில் கலந்து, 25 நாள்கள் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலில் 300 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், குருவிக்கண் நோய் குணமாகும். மேற்சொன்ன இலைகளுக்கு மாற்றாகத் துளசி, வேம்பு இலைகளை மட்டும் ஒரு கிலோ அளவில் எடுத்துப் பயன்படுத்தலாம்.

குளிர்காலங்களில் இலைகளின்மீது ‘பவுடர்’ பூசியதைப் போன்று வெண்மை படர்ந்து காணப்படும். இதற்குப் பூண்டு, வெங்காயம் கரைசலைத் தெளிக்கலாம். மிளகாய்ப் பயிரில், பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்குச் சர்வரோக நிவாரணியாக இருப்பது சீமைக்கருவேல்தான். சீமைக்கருவேல் இலை, காய்களைத் தலா ஒரு கிலோ எடுத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் பத்து நாள்கள் ஊற வைக்க வேண்டும். அதிலிருந்து ஒரு லிட்டர் கரைசலை எடுத்து, 5 லிட்டர் பஞ்சகவ்யாவில் கலந்து 25 நாள்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு இந்தக் கரைசலில் 300 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், அனைத்துவகையான பூச்சிகளும் கட்டுப்படும்.


இலைச்சுருட்டு நோய்! 

பொதுவாகப் பூக்கள், காய்கள் உருவாகிற சமயத்தில் செடிகளுக்கு உணவு தயாரிக்க அதிகளவில் பச்சையம் தேவைப்படும். அதனால், இலைகள் அதிகமாக உருவாகும். இலைகள் அதிகரிப்பதால், பூச்சிகளும் அணிவகுத்து வரக்கூடும். அந்தச் சமயத்தில், தக்க பராமரிப்பு முறைகளை மேற்கொண்டு பயிரைக் காக்க வேண்டியது நம் கடமை. இலைப்பேன், மஞ்சள் முரணைச் சிலந்திப்பூச்சி ஆகியவைதான் இலைகளை அதிகமாகத் தாக்குகின்றன. இலைப்பேன் மிளகாய் இலைகளில் அமர்ந்து இலைகளை மேல்நோக்கிச் சுருட்டும். இலைகள் மேல்நோக்கி சுருண்டு, கப்புகள்போல் காணப்பட்டால் அது இலைப்பேன் தாக்குதல்.

இலைப்பேன் தாக்குதலுக்கு வேப்பெண்ணெய் மருந்து நல்ல நிவாரணம் தரும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இலைகள் ஒன்றிரண்டு சுருளத் தொடங்கியவுடனே வேப்பெண்ணெய் மருந்தைத் தெளித்துவிட வேண்டும். தாக்குதல் அதிகமான பிறகு, தெளிப்பதால் பெரிய பலன் கிடைக்காது. 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இலைகள் சுருண்டுவிட்டால், அதை எந்த ரசாயனப் பூச்சிக்கொல்லியாலும் கட்டுப்படுத்த முடியாது.

மஞ்சள் முரணைச் சிலந்திப்பூச்சி இலைகளைக் கீழ்நோக்கிச் சுருட்டும். மஞ்சள் முரணைச் சிலந்திப்பூச்சி தாக்குதலைத் தடுக்க, மூலிகைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்தலாம். ஆடு தீண்டாப்பாளை, ஆடாதொடை, எருக்கன், புங்கன் போன்ற தாவரங்களின் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைப் பூச்சிவிரட்டி மற்றும் வேப்பெண்ணெய் மருந்து ஆகியவற்றை மாற்றி மாற்றித் தெளித்தால், மஞ்சள் முரணைச் சிலந்திப்பூச்சிகளை விரட்டி விடலாம்.


மூட்டுவலியைக் குறைக்கும் மிளகாய்! 

அறுசுவைகளில் காரச் சுவைக்காக மிளகாயைப் பயன்படுத்துகிறோம். காரத்துக்குக் காரணமான ஒலியோரெசினில் கால்சியம் அதிகளவில் இருக்கிறது. இது எலும்புகளுக்கு இடையே அடர்தன்மை குறைவு நோய் (ஆஸ்டியோ போரோசிஸ்), மூட்டுவலி, எலும்பு இணைப்புகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. அதனால்தான் மிளகாயை நாம் தொடர்ந்து உணவில் பயன்படுத்த வேண்டும் என்ற வழக்கத்தைக் கொண்டுவந்துள்ளனர். இந்தியாவிலேயே ஆஸ்டியோ போரோசிஸ் நோய் குறைவாக இருப்பது ஆந்திராவில்தான். காரணம் அவர்கள் அதிகளவில் மிளகாயைப் பயன்படுத்துவதால்தான்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here