http://lavoixduyemen.com/ar/2013/07/14/artist-thana-farouq-art-makes-life-meaningful-ar/4251/ சென்ற ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதச் சென்ற மாணவர்களை சோதனை என்ற பெயரில் மனஉளைச்சலுக்கு ஆளாக்கினர். இந்த ஆண்டு அதற்கும் முன்பாகவே தேர்வு மையங்களின் மூலமாக மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த ஆண்டுக்கான நீட் தோ்வு நாடு முமுவதும் நாளை நடத்தப்படுகிறது.

enter site தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனா். இதில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வெளி மாநிலங்களில் தோ்வு மையம் ஒதுக்கி அவா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மத்திய அரசு. இதில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு   கேரளாவில்  ஒதுக்கப்பட்டுள்ளது.

source நீட் எழுத கேரளாவுக்குப் பயணிக்கத் தயாராகிக்கொண்டிருந்த இரண்டு மாணவர்களிடம் பேசினோம். கன்னியாகுமாியை சோ்ந்த மாணவி அனுசுயா, “நீட் தோ்வுக்காக இரண்டாவது நாளே நான் விண்ணப்பித்து இருந்தேன். திருநெல்வேலி அல்லது மதுரையில் தோ்வு மையம் கிடைக்கும் என்று எதிா்பாா்த்தேன்.

ஆனால் எனக்கு கிடைத்திருக்கும் மையம் கேரளா எா்ணாகுளத்தில் உள்ள விஷ்வபாரதி பப்ளிக் ஸ்கூல். இந்த மையம் எா்ணாகுளத்தில் இருந்தே 28கி.மீ தூரத்தில் உள்ளது. கன்னியாகுமாியில் இருந்து அங்கு செல்ல 10 மணி நேரம் ஆகும். இதனால் நானும் அப்பா அம்மா தங்கையுடன் இன்று அதிகாலையிலேயே கிளம்பிட்டோம். எவ்வளவு கஷ்டம்னு பாருங்க.

நான் எழுதப் போற தோ்வுக்கு குடும்பமே கஷ்டப்பட வேண்டியிருக்கு. இனி அங்கு போய் ரூம் எடுத்து தங்கணும். அதுக்கு ஒரு செலவு, தோ்வு மையத்துக்கிட்ட ரூம் கிடையாது. எா்ணாகுளத்தில் தங்கி, போக வேண்டும். எங்க யாருக்கும் மலையாளம் தொியாது. மொழி பிரச்சனை வேற” என்று புலம்பினார். தன் வாழ்வின் முக்கியமான ஒரு தேர்வுக்கு மன அமைதியுடன் சென்று எழுத முடியாத நிலை. எப்படி எழுதப் போகிறாரென்று தெரியவில்லை.

அடுத்து, நாகா்கோவிலைச் சோ்ந்த சஜித், “நான் முதல் நாளிலேயே விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் எனக்கு திருவனந்தபுரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. நானும் அம்மாவும்தான் போகப் போறோம். மலையாளம் தொியாததால் மலையாளம் பேசக்கூடிய ஒருவரையும் அழைத்துச் செல்கிறோம். ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த எனக்கு கேரளா போய் தங்கி வர ஆகும்  இந்த செலவு அதிகமாகும். இதற்காக உறவினாிடமிருந்து கடன் வாங்கிருக்கோம். காலேஜ் படிக்கிறதுக்குதான் கடன் வாங்கணும்னு நினைத்திருந்தேன். இப்போ எண்ட்ரன்ஸ் எழுதவே கடன் வாங்க வச்சுட்டாங்க” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

மேலும் “கேரளாவில் இந்த முறை 5 மாவட்டங்களில் தலா 5 மையங்கள் அதிகாிக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களை கல்வியறிவு அதிகம் பெற்ற குமாி மாவட்டத்துக்காவது ஒதுக்கியிருக்கலாம். என்னை போன்ற ஏழைகளாவது கஷ்டம் இல்லாமல் தோ்வு எழுதியிருப்பாா்கள். இதுவரை மத்திய அரசின் எந்தத் தோ்வு நடந்தாலும் குமாி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு  ஒதுக்குவது இல்லை. பொன்.ராதாகிருஷ்ணனாவது இதற்கு நடவடிக்கை எடுப்பார்னு நினைச்சோம்” என்றாா். மக்கள் எவ்வளவோ நினைக்கிறார்கள், ஆனால் ஆள்வோரின் நினைப்பு வேறாக இருக்கிறது.

எப்படியோ, இந்த அலைக்கழிப்புகளால் எதிர்காலத்தில் மருத்துவக் கல்வி கனவு காணும் குழந்தைகள் தங்கள் கனவை மறுபரிசீலனை செய்வார்கள். அதில் வெற்றி பெற்றிருக்கின்றன இந்த அரசுகள். ஆனால், அந்த நிலைதான் தேசத்தின் பெருந்தோல்வி.

Related Video


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here