நியூட்ரினோ – அறிவியலா, அழிவியலா, அரசியலா? – பகுதி 4 #Neutrino

இப்படியாக, நல்ல அறிவியல் கெட்ட அரசியலோடும், கெட்ட அறிவியல் நல்ல அரசியலோடும் இணைந்து அழிவுகளை ஏற்படுத்துவது தான், உலக வரலாற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்ளும் "அறிவியல் அரசியல்" கோட்பாடாக இருக்கிறது. நியூட்ரினோ,  ஆகச்சிறந்த அறிவியலாகவே இருந்தாலும் கூட, அது அறமற்ற அரசியலின் பிடியில் சிக்கி கேடுகளை ஏற்படுத்திடக் கூடாது என்பது தான் அனைவரின் நல்லெண்ணமுமாக இருக்க முடியும்... 

0
83
Want create site? Find Free WordPress Themes and plugins.

buy cheap dapoxetine நியூட்ரினோ திட்டத்திற்கு ஆதரவாக பல ஆராய்ச்சியாளர்கள் பலவித கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டேதானிருக்கிறார்கள். ஆனால், திட்டத்திற்கான எதிர்ப்புகள் நாளுக்கு, நாள் வலுவடைந்துக் கொண்டேதானிருக்கின்றன. இது குறித்து, மும்பையில் இருக்கும் ஐ.என்.ஓ திட்ட இயக்குநர் விவேக் டத்தாரை (Vivek Datar) தொடர்பு கொண்டு பேசினோம்…

“இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை. இது நம் தேசத்திற்கே பெரிய பெருமையைத் தேடி தரும் திட்டம். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்  இதை நிச்சயம் ஆதரிப்பார்கள். இது தமிழ்நாட்டில் வருவதற்கு தமிழர்கள் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தான் கொங்கன் ரயில்வே தடம் அமைந்துள்ளது. அது எத்தனை சுரங்கங்களை அங்கு வெட்டியுள்ளது? அதனால் எல்லாம் அழிந்துவிட்டதா என்ன? இன்றைக்கு இருக்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு ஒரே ஒரு சுரங்கத்தை இங்கு அமைக்க இருகிறோம். சின்ன அதிர்வலைகளைக் கூட அது ஏற்படுத்தாது.

இப்படியான கற்கள் இந்தியாவில் வேறு எங்குமே இல்லை. தமிழ்நாட்டில் இது இருப்பதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வெண்டும். வெட்டப்படும் கற்களில் 10% தான் நாங்கள் எடுத்துக் கொள்வோம். 90% தமிழக அரசுக்கு தான். அதை அவர்கள் விற்று, அதன் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம்.

விவேக் டத்தார்

நாங்கள் நிலத்தடி நீரை உறியப் போகிறோமோ? மாசு படுத்தப்போகிறோமா? என்று கேட்டால், ‘நிச்சயம் இல்லை’ என்பது தான் பதில். தண்ணீர் எங்களுக்குத் தேவைதான். இப்போதைக்கு எங்களுக்கு ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் இதைவிட சற்று கூடுதலாக தேவைப்படலாம். 2 லட்சம் லிட்டர் தண்ணீர் என்பது நாம் மலைக்கும் அளவிற்கானது கிடையாது. அது குடியிருப்புப் பகுதி ஒரு நாளைக்கு உபயோகப்படுத்தும் அளவு தான் அது. அதே போல், இந்தத் திட்டத்தால் எதையும் நாங்கள் கண்டிப்பாக மாசு படுத்தமாட்டோம். நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை. வெளிப்படையாகத் தான் இருக்கிறோம்…” என்றவரிடம்…

 

[hvp-video url=”https://www.rajtamil.in/wp-content/uploads/2018/04/Neutrino.mp4″ adtagurl=”https://playlist.ventunotech.com/api/publisher/getAd.php?admode=preroll&key=5026f47f7e3a3&category=news&pageurl=https%3A%2F%2Fwww.rajtamil.in%2Fa-detailed-study-on-neutrino-project-part-1&content_title=a-detailed-study-on-neutrino-project-part-1&content_keywords=#Neutrino&player_width=100%&player_height=100%&autoplay_status=&ad_type=VPAID2.0″ poster=”https://vtnpmds-a.akamaihd.net/659/03-05-2017/929742_S2XIFGTD_org_resize_640x360.jpg” controls=”true” autoplay=”true” loop=”false” muted=”false” ytcontrol=”false”][/hvp-video]

 

see அமெரிக்காவின் ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்தோடு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

” தேவைப்பட்டால் கண்டிப்பாக அமெரிக்காவோடு மட்டுமல்ல, பல உலக நாடுகளோடும் ஒப்பந்தம் போடத் தான் செய்வோம். அறிவியல் என்பது மொத்த உலகிற்குமான பொதுவான ஓர் விஷயம். ”

http://ibprairies.org/?page=buy-voltaren-topical-gel ஆனால், அமெரிக்காவின் ஃபெர்மியோடு ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், அதை எந்த இந்திய வலைதளத்திலும் பதியாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்களே? எதிர்காலத்தில் போடலாம் என்பது சரி. இப்போது ஃபெர்மியோடு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதா? இல்லையா?

” ஃபெர்மியோடு ஒப்பந்தம் போட்டிருப்பது உண்மை தான். ஆனால், அது நீங்கள் நினைக்கும் வகையிலானது கிடையாது. நம் வளர்ச்சிக்காகத் தான் அந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அவர்களால் நாம் தான் பயனடைவோம். நம்மால் அவர்கள் பயனடைய மாட்டார்கள். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே அமெரிக்காவிற்குத் தான் என்பது போல் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை.”

நியூட்ரினோ திட்டம் அமையவிருக்கும் அம்பரப்பர் மலை

நியூட்ரினோ கற்றைகளை அவர்களிடமிருந்து பெற்று ஆராய்ச்சி செய்யப்போவது உண்மையா?

” இல்லை. இப்போதைக்கு நியூட்ரினோ கற்றைகளை அவ்வளவு தூரம் கொண்டு வந்து சேர்க்கும் தொழில்நுட்பம் இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில் அது நடந்தால், அதை நாம் செய்யலாம். அதில் எந்தத் தவறு ஏதுமில்லையே. ஒரு அறிவியல் ஆராய்ச்சி என்றால் பல உலக நாடுகளோடு இணைந்து வேலை செய்யத் தான் வேண்டும். இதெல்லாம் பெரிய பிரச்னையா?”

cefadroxil 500 mg and alcohol இந்த ஆய்வுகள் கதிரியக்கங்களை வெளியிட ஏதும் வாய்ப்புகள் உண்டா?

” கண்டிப்பாக கிடையாது. கதிரியக்கம் இருந்தால் நியூட்ரினோக்களைப் பிடிக்கவே முடியாது. ”

Alfred Tang சொல்லியிருக்கும் கோட்பாடு குறித்து? ( நியூட்ரினோவைக் கொண்டு அணு ஆயுதங்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதை வெடிக்கச் செய்யவும், செயலிழக்கச் செய்யவும் முடியும்)

“ஆம்…அந்தக் கருத்து பொய்யில்லை. ஆனால், அது இன்று வரை ஒரு ஆய்வுக் கட்டுரையாகத் தான் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு அறிவியல் வளர்ச்சி வேண்டும் என்றால் இந்தத் திட்டத்தை எதிர்க்காதீர்கள். இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டேயிருந்தால் இங்கு எதையுமே செய்யாமல், வளராமல் அப்படியே இருக்க வேண்டியது தான்…” என்று கோபத்தோடு சொல்லி முடிக்கிறார் விவேக் டத்தார்.

அணுகுண்டு தயாரிப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) நேரடியாக ஈடுபடவில்லை. ஆனால், அவரின் கண்டுபிடிப்புகள் தான் அதற்கான அடித்தளத்தை அமைத்தன. ஆல்ஃப்ரெட் நோபலின் (Alfred Nobel) கண்டுபிடிப்பு ஆயுதங்கள் தயாரிக்க வித்திட்டன. அந்த வருத்தத்தில் தான் அவர் “அமைதிக்கான நோபல் பரிசு” வழங்குவதைத் தொடங்கினார்.

இப்படியாக, நல்ல அறிவியல் கெட்ட அரசியலோடும், கெட்ட அறிவியல் நல்ல அரசியலோடும் இணைந்து அழிவுகளை ஏற்படுத்துவது தான், உலக வரலாற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்ளும் “அறிவியல் அரசியல்” கோட்பாடாக இருக்கிறது. நியூட்ரினோ,  ஆகச்சிறந்த அறிவியலாகவே இருந்தாலும் கூட, அது அறமற்ற அரசியலின் பிடியில் சிக்கி கேடுகளை ஏற்படுத்திடக் கூடாது என்பது தான் அனைவரின் நல்லெண்ணமுமாக இருக்க முடியும்…

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here