நியூட்ரினோ – அறிவியலா, அழிவியலா, அரசியலா? – பகுதி 3 #Neutrino

0
118
Want create site? Find Free WordPress Themes and plugins.

http://rnrorganisation.co.uk/resources/west-midlands-funding-15-on-twitter/ buy modafinil credit cardரம்பக்காலங்களில் இருந்தே நியூட்ரினோவுக்கு எதிராகத் தொடர்ந்து பேசியும், வழக்குகளை நடத்தியும் வருபவர்கள் இரண்டு பேர். ஒருவர் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ. மற்றொருவர் “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

நியூட்ரினோவை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்வியோடு சுந்தர்ராஜனை சந்தித்தோம்…

” நாங்கள் தேச நலனிற்கோ, அறிவியல் வளர்ச்சிக்கு எதிராகவோ கண்ணை மூடிக் கொண்டு இந்தத் திட்டத்தை எதிர்க்கவில்லை. திட்டம் குறித்த விஷயங்களை வெளிப்படையாக மத்திய அரசு சொல்ல மறுப்பதால், எங்களுக்கு எழும் சந்தேகங்களைத் தொடர்ந்து கேள்விகளாக எழுப்புகிறோம். சட்ட ரீதியில் அதற்கான விடைகளைக்  காண முயற்சிக்கிறோம்.

நியூட்ரினோவை ஏதோ ஓர் அபாயகரமான பொருள் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் நோக்கம் தான் எங்களுக்குப் பல கேள்விகளையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமாவோடு “உயர் ஆற்றல் இயற்பியல்” (High Energy Physics) ஆராய்ச்சி ஒப்பந்தம் போடப்படுகிறது. அதன் பொருட்டு, 12வது 5 ஆண்டு திட்டத்தில் மொத்தம் 6 திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதில் ஒன்று தான் ஐ. என். ஓ. இத்தனை ஆண்டுகளில் மற்ற 5 திட்டங்களும் இன்னும் அறிக்கையாகக் கூட தயாராகவில்லை. ஆனால், நியூட்ரினோவிற்கு மட்டும் அரசு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது.

இந்திய அணுசக்திக் கழகமும், அமெரிக்காவின் “ஃபெர்மி” ஆராய்ச்சிக் கூடமும் (Fermi Lab) நியூட்ரினோ ஆராய்ச்சிக்காக சில ஒப்பந்தங்களைப் போடுகிறார்கள். ஐ. என். ஓவின் திட்ட அறிக்கையில், முதல் சில வருடங்களுக்கு இயற்கையான நியூட்ரினோக்கள்  (Natural Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும். பின்னர், அடுத்தகட்டமாக செயற்கை நியூட்ரினோக்கள் (Artificial/ Lab Made Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறது. இந்த செயற்கை நியூட்ரினோக்களை நம்மால் தயாரிக்க முடியாது. அதைத் தயாரிப்பது ஃபெர்மி போன்ற வெளிநாட்டு ஆராய்ச்சிக் கூடங்கள்  தான்.

இது எப்படி இயங்கும் என்றால், அந்த ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து, நியூட்ரினோக்கள் கற்றைகளாக (Muon Colliders) நம்  ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பப்படும். அந்த நியூட்ரினோக்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்து, அந்த முடிவுகளை நாம் அந்த ஆராய்ச்சிக் கூடங்களுக்குக் கொடுக்க வேண்டும். நம்மிடம் இருப்பது உணர்கருவிகள் (End Detectors) மட்டும் தான். இயற்கையான நியூட்ரினோ குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால், இந்த “மியூவான் கொலைடர்ஸ்” (Muon Colliders) கதிரியக்கத் தன்மைக் கொண்டதாக இருக்குமோ என்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. அப்படி ஒருவேளை அது கதிரியக்கத் தன்மைக் கொண்டதாக இருக்கும்பட்சத்தில், ஒரு ஆராய்ச்சிக்கான மூலப் பொருள் கதிரியக்க தன்மைக் கொண்டதாக இருக்கும் போது, அதை ஆராய்ச்சி செய்யும் கூடத்திலும் அதன் தாக்கம் ஏதாவது ஏற்படுமோ என்கிற பயம் இருக்கவே செய்கிறது.

நியூட்ரினோ திட்டம் செயல்படவிருக்கும் அம்பரப்பர் மலை

எல்லாவற்றிற்கும் மேல், இந்த ஃபெர்மி லேப் உடனான ஒப்பந்தம் குறித்த எந்த தகவல்களையுமே மத்திய அரசோ, ஐ. என். ஓவோ எங்குமே குறிப்பிடவில்லை. ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்தின் இணையதளத்திலிருந்து இந்தத் தகவல்களை நாங்கள் பெற்றோம். இந்த விஷயத்தை வெளிப்படையாக சொல்லாமல் மறைக்க வேண்டிய காரணம் என்னவிருக்கிறது?  ஃபெர்மி மட்டுமல்லாமல் சுவிட்சர்லாந்தின் “CERN” போன்ற ஆராய்ச்சிக் கூடங்களோடும் இவர்கள் இப்பந்தம் போட்டிருக்கிறார்கள். நியூட்ரினோ குறித்த அடிப்படை ஆராய்ச்சிகளை எல்லாம், பல நாடுகளும், பல ஆண்டுகளுக்கு முன்பே முடித்துவிட்டனர். நியூட்ரினோ ஆராய்ச்சியில் இப்போதைக்கு இரண்டு முக்கிய விஷயங்களைத் தான் உலக நாடுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ஒன்று Long BaseLine Neutrino Experiment (LBNE) . மற்றொன்று Deep Underground Neutrino Experiment. தூரம் போக, போக நியூட்ரினோக்களின் தன்மையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இப்போது அந்த மாற்றங்கள் குறித்த ஆய்வுகளைத் தான் மேற்கொள்ளவிருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சிக்கு தான் இந்தத் திட்டம் உதவப் போகிறது.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

ஐ.என்.ஓவின் அறிக்கையிலேயே கூட, பொட்டிபுரம் பகுதியை “Magic Baseline” என்று குறிப்பிடுகிறார்கள். இந்தப் பகுதியிலிருந்து சுவிட்சர்லாந்தின் CERN ஆய்வகத்திற்கு 7,500கிமீ தான். உலகின் இன்னும் பல நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடங்களுக்கும் தொலைவு இந்த ரீதியில் தான் இருக்கும். இப்போதைக்கு அதிகபட்சமாக 1300கிமீ தூரம் வரை நியூட்ரினோவை பயணிக்க வைத்து ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இதன் அடுத்தக்கட்டமாக, இங்கு அந்த நியூட்ரினோ கற்றைகளை அனுப்பி, ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள்.

சரி…இப்படி உலகின் பல நாடுகளும் ஏன் இந்த ஆராய்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? என்று தேடும் போது எங்களுக்கு இன்னும் ஒரு முக்கிய விஷயம் தெரிய வருகிறது. 2008யில் Alfred Tang எனும் ஆராய்ச்சியாளர், ” Neutrino Counter, Neutrino Weapon” என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பிக்கிறார். அதில் அவர், நியூட்ரினோவைக் கொண்டு அணு ஆயுதங்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கலாம். அணு ஆயுதங்களை செயலிழக்க வைக்கலாம். அதே சமயம். அணு ஆயுதங்களை வெடிக்கவும் வைக்கலாம் என்று குறிப்பிடுகிறார். அவர் மட்டுமல்ல, அதற்கு முன்பும், அதே போன்ற ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. எனில், இந்த ஆராய்ச்சியின் நோக்கம் குறித்த கேள்வி எழுகிறது. நியூட்ரினோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட, தன் கட்டுரையில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அம்பரப்பர் மலை

அதுமட்டுமில்லாமல், இதைக் கட்டும்போது ஒரு சின்ன அதிர்வலைகள் கூட ஏற்படாது. எந்த மாசு கேடும் இருக்காது என்று சொல்வதையும் ஏற்க முடியாது. மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பூகம்பம் குறித்த தரவுகளில் –  “ஹைக்குவேக்” ( Hiquake – Human Induced Earth Quakes), 37% நிலநடுக்கங்கள் சுரங்களினாலும், 22% நிலநடுக்கங்கள் பெரிய அணைகளினாலும் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அம்பரப்பர் மலைப் பகுதியைச் சுற்றி வைகை, முல்லைப் பெரியாறு உட்பட 12 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. ஏற்கனவே அணைகளால் அழுத்தப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில், இப்படியான ஒரு சுரங்கத்தை தோண்டும் போது எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் வாய் மொழியாக சொல்வதைக் காட்டிலும், தகுந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறோம். காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் க்ரான் சாசோ (Gran Sasso) எனும் நியூட்ரினோ மையத்தில் இது போன்ற ஒரு சுரங்கத்தை கட்டும் போது, நீரியியல் பூகம்பம் ஏற்பட்டது. அதை உடனடியாக நிறுத்திவிட்டனர். ஒரு பெரிய விபரீதம் நடந்து, பல ஆயிரம்  உயிர்கள் பலியான பிறகு தான் எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்வோம் என்ற பிடியில் இருக்காதீர்கள். முன்னெச்சரிக்கையாக இருங்கள். வெளிப்படைத்தன்மையோடு இயங்குங்கள். எங்கள் நிலத்தையும், வளத்தையும் சுரண்டும் நோக்கோடு வராதீர்கள். அவ்வளவு தான். மற்றபடி நாங்கள் அறிவியல் வளர்ச்சிக்கே எதிரானவர்கள் அல்ல. அதே சமயம் எங்களின் இயற்கை வளங்களை சுரண்டி, சூழலைக் கெடுக்கும் எதையும், எந்த நாளும் அனுமதிக்க மாட்டோம்…” என்று காட்டமாக சொல்லி முடிக்கிறார் சுந்தர் ராஜன்.

நியூட்ரினோ துகள் என்பது ஆபத்தில்லை. ஆனால், செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து சுந்தர்ராஜன் எழுப்பிய கேள்விகளோடு, மும்பையிலிருக்கும் ஐ.என்.ஓ திட்ட இயக்குநர் விவேக் டத்தாரைத் தொடர்புக் கொண்டோம்…

அம்பரப்பர் மலை

” நியூட்ரினோ திட்டத்திற்காக வெட்டப்படும் கற்களில் 10% தான் நாங்கள் எடுத்துக் கொள்வோம். 90% தமிழக அரசுக்கு தான். அதை அவர்கள் விற்று, அதன் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே அமெரிக்காவிற்காகத் தான் என்பது போல் எல்லாம் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களோடு கூட்டு வைத்திருப்பது உண்மை தான். ஆனால்….”

his response (ஐ.என்.ஓ திட்ட இயக்குநர் விவேக் டத்தாரின் முழு பேட்டியை அடுத்த பாகத்தில் பார்க்கலாம். )


1. நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமும்   தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“தீவிரவாதிகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்களக் கண்டுபிடிக்க நியூட்ரினோக்கள் உதவும். இதன் மூலம் உலகில் அமைதியைக் கொண்டு வர முடியும். அது மட்டுமல்லாமல், கனிம வளங்கள் இருக்கும் இடங்களையும் நியூட்ரினோ ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க முடியும்” என்று நியூட்ரினோவுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரையில் அப்துல்கலாம் குறிப்பிட்டுள்ளார்.


2. பொட்டிபுரம் பகுதியை “கல்லடிக் காற்று” பகுதி என்று சொல்கிறார்கள். மிக அதிகப்படியான காற்று வீசும் பகுதியாக இது இருக்கிறது. இதற்கு அரணாக இருப்பது, அந்தப் பகுதியிலிருக்கும் “Shrub” வகை காடுகள். இப்போது நியூட்ரினோ திட்டத்திற்காக அந்தக் காடுகளை அழிப்பார்கள். அப்போது, காற்று மிக பலமாக வீசும். அது அவர்களுக்கே கூட பாதகமாக அமையலாம் என்று எச்சரிக்கிறார்கள் சில சூழலியலாளர்கள்.


3. வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்:

” இது அபாயகரமான திட்டம். நாசகாரத் திட்டம். இது மட்டும் நடந்தால் தேனி மாவட்டமே பஞ்சப்பிரதேசமாகி விடும். பாலைவனமாகும். என்னால், இன்னும் கூட கடுமையாக நீதிமன்றங்களில் இதற்கு எதிராகப் போராட முடியும். ஆனால், பிரதமர் மோடியின் தீவிரத்தைப் பார்க்கும்போது தான் பயமாக இருக்கிறது. இந்தத் திட்டத்தால் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளமும் பெரிய அழிவை சந்திக்கும். இந்தத் திட்டத்தில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருக்கிறது. ஃபெர்மி ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பெரிய பங்கிருக்கிறது. அமெரிக்காவின் அழுத்தத்தில் தான் மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறது. இதை ஒரு நாளும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.”

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here