மதுரை: மதுரையில் சிக்கந்தர்சாவடி பகுதியில் போலீசார் இன்று நடத்திய என்கவுன்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். ரவுடிகளை சரண்அடையுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரவுடிகள் போலீசாரை தாக்க முயற்சித்தனர்.

இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடிகள் மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் நிருபர்களிடம் பேசுகையில்; கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க செல்லூர் போலீசார் குழு வந்தனர்.

இந்நேரத்தில் பிஸ்டல் வைத்து தாக்க முயற்சித்தனர். ஒரு போலீசாரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது விசாரித்து வருகிறோம். சிறிது நேரத்தில் முழு விவரத்தை தெரிவிக்கிறோம் என்றார். இருவரும் இறந்து விட்டனரா என்பதை டாக்டர்கள்தான் சொல்ல வேண்டும். என்றார்.

Related Video


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here