`தனிக்கட்சியில் சசிகலாவுக்கு என்ன பதவி?’ – அடுத்தடுத்து அரங்கேறும் சிறை பஞ்சாயத்துகள்

0
24
Want create site? Find Free WordPress Themes and plugins.

பரப்பன அக்ரஹாரா சிறையில், வரும் 6-ம் தேதி சசிகலாவை சந்தித்துப் பேச இருக்கிறார் தினகரன். அவருடைய தனிக்கட்சி முயற்சிக்கு சசிகலா எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. `தனிக்கட்சியில் சின்னம்மாவுக்கு என்ன பதவி என ஆதரவாளர்கள் கேட்கின்றனர். இதற்கு தினகரனிடம் எந்தப் பதிலும் இல்லை’ என்கின்றனர் குடும்ப உறவுகள்.

பெங்களூரு சிறையில் கடந்த 19-ம் தேதி சசிகலாவை சந்தித்துப் பேசினார் தினகரன். இந்தச் சந்திப்பில், தனிக்கட்சித் தொடங்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதற்குப் பதில் அளித்த சசிகலா, ‘இப்போது அதற்கான அவசியம் என்ன வந்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என உறுதியாகத் தெரியவில்லை. 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் என்ன தீர்ப்பு வரும் என்றும் தெரியவில்லை. அதற்கு முன்னதாகத் தனிக்கட்சித் தொடங்கினால், நம்முடைய தரப்புதான் பலவீனமாகும். கொஞ்சம் பொறுத்திரு’ என விளக்கம் அளித்தார்.

இந்தச் சமாதானத்தை ஏற்கும் முடிவில் தினகரன் இல்லை. இதைப் பற்றி சசிகலாவிடம் பேசியவர், ‘நீங்கள் எடப்பாடி பழனிசாமியைப் பற்றியும் பன்னீர்செல்வத்தைப் பற்றியும் தப்புக் கணக்கு போட்டு வைத்திருக்கிறீர்கள். இவர்கள் எந்தக் காலத்திலும் இரட்டை இலையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தேர்தலில் ஓரளவு வெற்றியைப் பெற்று தோற்றாலும் சரத் பவார் போலச் செயல்படுவார்களே தவிர, நம்மிடம் கட்சியை ஒப்படைக்க மாட்டார்கள்.

கமல் போன்றவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதால், களத்தில் போட்டி அதிகரித்துவிட்டது. தனிக்கட்சியை உடனே தொடங்கினால்தான், நம்மால் அரசியலில் நிலைத்திருக்க முடியும்’ என்றெல்லாம் கூறியிருக்கிறார். இந்த விளக்கத்தை சசிகலா ஏற்கவில்லை.

தினகரன்தனிக்கட்சி தொடர்பாகக் கேள்வி எழுப்பும் உறவினர்களோ, ‘மூன்று கட்சிகளின் பெயர்களை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் தினகரன். தேர்தலுக்கான சூழல்களே இல்லாதபோது, தனிக்கட்சி எதற்கு என்ற கேள்விதான் அனைவர் மனதிலும் எழுகிறது. அப்படியே கட்சி தொடங்கினாலும், அதில் சின்னம்மாவுக்கு என்ன பதவி வழங்கப்படும்.

நம்மையே நம்பி தியாகம் செய்த 18 எம்.எல்.ஏ-க்களுக்கு என்ன பதில் சொல்வது. நம்முடைய தனிக்கட்சியால், அ.தி.மு.க-வுக்கு எதிராகப் போட்ட அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துவிடும்’ என நிலவரத்தை எடுத்துக் கூறியுள்ளனர். இதற்குப் பதில் அளித்த தினகரன் தரப்பினர், ‘சின்னம்மா சிறையில் இருப்பதால், தனிக்கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்குவதற்குச் சாத்தியமில்லை.

அவரால் செயல்படவும் முடியாது. சிறையிலிருந்து வெளியில் வந்ததும் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார் தினகரன்’ எனப் பேசி வருகின்றனர். “தன்னுடைய தலைமையை மட்டுமே முன்னிறுத்தும் தினகரனின் செயல்பாடுகளால் குடும்பத்தினர் மத்தியில் கொந்தளிப்பு உருவாகியுள்ளது” என்கின்றனர் மன்னார்குடி உறவுகளுக்கு வேண்டப்பட்டவர்கள்.

“எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான ஊழல்களைக் கூறுவதன் மூலம், அரசைப் பணியவைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் தினகரன். இந்தச் சந்தர்ப்பவாதத்தைப் புரிந்துகொள்ளாமல் சிக்கிக் கொண்டனர் வெற்றிவேலுவும் தங்க.தமிழ்ச்செல்வனும். ‘தலைமைச் செயலகத்தில் பேட்டி கொடுத்தால், எடப்பாடி பழனிசாமியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்’ என்ற உண்மை தெரிந்தும், தன்னுடைய ஆதரவாளர்களை அனுப்பிப் பேச வைத்தார்.

தினகரனோடு இருக்கும் நான்கு தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களைத் தவிர்த்து, மற்றவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொள்வார்கள். தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வரும்போது காட்சிகள் மாறும்” என்கின்றனர் அமைச்சர்கள் தரப்பில்.

பெங்களூரு சிறையில் நடக்கும் சந்திப்பில், தனிக்கட்சி முடிவுக்கு ஒப்புதல் பெறும் முயற்சியில் இருக்கிறார் தினகரன். ‘தனிக்கட்சி அவசியமில்லை’ என்ற முடிவில் இருக்கிறார் சசிகலா. ‘தான் மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும் எனத் தினகரன் நினைப்பது எந்த வகையில் சரியானது’ எனக் கொதிக்கின்றனர் உறவுகள். இந்த முக்கோண மோதலில் சிக்கித் திணறுகின்றனர் மன்னார்குடி ஆதரவாளர்கள்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.
Related Video


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here