கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் இல்லை; சி.பி.ஐ., காவலில் மேலும் 5 நாள்

0
14
Want create site? Find Free WordPress Themes and plugins.

புதுடில்லி: மாஜி மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கை மேலும் 5 நாள் சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

மாஜி மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி இன்று டில்லி சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இவரை மேலும் 14 நாள் தங்களின் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது என சி.பி.ஐ., கோரிக்கை வைத்தது. இதனை ஏற்று கொண்ட கோர்ட் மேலும் 5 நாள் அவரை சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. மேலும் அவருக்கு கோரப்பட்ட ஜாமினும் வழங்கப்படவில்லை. 5 நாள் விசாரணை முடிந்து வரும் 6ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் கோர்ட் உத்தரவிட்டது.

வீட்டு உணவுக்கு மறுப்பு:

கார்த்தி சிதம்பரத்துக்கு வீட்டு உணவு வழங்கவும் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. காலை, மாலை தலா ஒரு மணி நேரம் தனது வக்கீலை சந்திக்கவும், மருத்துவர்களின் பரிந்துரையின் படி மருந்துகள் வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கோர்ட்டில் ப.சிதம்பரம், அவரது மனைவி நளினிசிதம்பரம் மற்றும் காங்., மூத்த நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். ” தைரியமாக இரு ” என கார்த்திக்கிடம் சிதம்பரம் ஆறுதல் கூறினார்.

கும்பகர்ணனாக சி.பி.ஐ., ?

கார்த்தி மீது உள்நோக்கத்துடன் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் காங்., கட்சியின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார். கடந்த பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. சி.பி.ஐ., கும்பகர்ணன் போல் தூங்கிவிட்டு தற்போது எழுந்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.

ஆனால் சிபிஐ இதனை மறுத்தது. ஆதாரங்கள் இருப்பதாகவும், இதன் அடிப்படையிலேயே வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் சிபிஐ வழக்கறிஞர் கூறினார்.

நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரத்தின் மகன், கார்த்தி, நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.
Related Video


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here